இடுகைகள்

அண்ணல் நபி (ஸல்) நம்மிடம் எதிர்பார்ப்பது எது?

உயிருக்கு உயிரான உயிரினும் மேலான கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள் பிறந்த ரபீஉல் அவ்வல் மாதம் நம்மை வந்தடைய இருக்கின்றது. அதிலும் குறிப்பாக இவ்வருடம் அம்மாதம் திங்கட்கிழமை தொடங்குவது சிறப்பினில் இன்னொரு சிறப்பாகும். ஏனெனில் திங்கட்கிழமை அண்ணல் (ஸல்) அவர்கள் இப்பூலகில் பிறந்த தினமாகும். حَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ حَدَّثَنَا مَهْدِيُّ بْنُ مَيْمُونٍ عَنْ غَيْلَانَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَعْبَدٍ الزِّمَّانِيِّ عَنْ أَبِي قَتَادَةَ الْأَنْصَارِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سُئِلَ عَنْ صَوْمِ الِاثْنَيْنِ فَقَالَ فِيهِ وُلِدْتُ وَفِيهِ أُنْزِلَ عَلَيَّ رواه مسلم இந்த சந்தர்ப்பத்தில் நன்றியுணர்வோடு நமது நாயகம் (ஸல்) அவர்களை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். மக்களை நேர்வழிப்படுத்திட அல்லாஹ்வால் அனுப்பப்பட்ட இறைத்தூதர்களில் அவர்கள் உயர்வானவர்கள் மட்டுமல்ல… எல்லா இறைத்தூதர்களைக் காட்டிலும் தமது உம்மத்திற்காக அதிகம் உழைத்தவர்களும் கூட. ஆம்! நமக்கா

இளம் ஆலிம்களே! உங்களைத்தான்!

இளம் ஆலிம்களே! உங்களைத்தான்! மௌலவி, அ. முஹம்மது கான் பாகவி நபிமொழிக் கலை அரபிக் கல்லூரி மாணவக் கண்மணிகளே! நம் மத்ரஸா பாடங்களில் தஃப்சீருக்கு அடுத்ததாக ‘ஹதீஸ்’ எனும் நபிமொழிப் பாடம் இடம்பெறுகிறது. ‘ஹதீஸ்’ என்றால் என்ன? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் ஆகியவற்றுக்கே ‘ஹதீஸ்’ என்று சொல்லப்படும். இந்த ‘ஹதீஸ்’தான் இஸ்லாமிய ‘ஷரீஆவின் இரண்டாவது மூலாதாரமாகும். இறைமறையாம் திருக்குர்ஆனின் பொருள் விளக்கமாகவும் செயல்வடிவமாகவும் ஹதீஸ் அமைகிறது. எனவே, ஹதீஸ் இல்லாமல் குர்ஆன் மட்டுமே எனக்குப் போதும் என்று எவரும் வாதிட முடியாது. ஏன், இறைத்தூதரைப் பின்பற்றியவர்தான் இறைவனுக்குக் கீழ்ப்படிந்தவராவார். இறைத்தூதருக்கு மாறு செய்தவர் இறைக்கட்டளையை மீறியவர் ஆவார். பின்வரும் திருவசனங்களைப் பாருங்கள்: (அல்லாஹ்வின்) தூதருக்குக் கீழ்ப்படிகின்றவர், நிச்சயமாக அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்துவிட்டார். (4:80) அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் யார் கட்டுப்பட்டு நடக்கிறார்களோ அவர்களை அவன் (சொர்க்கச்) சோலைகளில் நுழையவைப்பான். (4:13) எந்தத் தூதரையும், அல்லாஹ்வின் ஆணைக்கேற்ப அவருக்கு (மக்கள்) கீழ்ப்படிந்

துஆவின் தொடக்கத்தில் ஸலவாத் அவசியம் :

துஆவின் தொடக்கத்தில் ஸலவாத் அவசியம் : நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பள்ளியில் அமர்ந்திருந்த போது ஒரு மனிதர் பள்ளிக்குள் வந்து தொழுதார். தொழுது முடித்தவுடன் "இறைவா! என் பாவத்தை மன்னிப்பாயாக! மேலும் எனக்கு கிருபை செய்வாயாக!" என்றார். அப்போது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "தொழுபவரே அவசரப்பட்டுவிட்டீர்; தொழுது முடித்து (துஆவுக்காக) அமர்ந்து விட்டால் அல்லாஹ்வை அவனுக்கு தகுதியான வார்த்தைகளால் புகழ்வீராக. இன்னும் என்மீது ஸலவாத் சொல்லி அதன் பிறகு அவனிடம் பிரார்த்திப்பீராக" என்று கூறினார்கள். இந்நிகழ்வு நடந்த சிறிதுநேரத்தில் வேறொரு மனிதர் வந்து தொழுதார். அதன் பின் அல்லாஹ்வை புகழ்ந்து நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸலவாத்துச் சொன்னார். அப்போது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவரைப் பார்த்து, "தொழுதவரே நீர் பிரார்த்திப்பீரானால் உமது துஆ ஒப்புக் கொள்ளப்படும்" என்று கூறினார்கள். (திர்மிதி, மிஷ்காத் 86)