அண்ணல் நபி (ஸல்) நம்மிடம் எதிர்பார்ப்பது எது?
உயிருக்கு உயிரான உயிரினும் மேலான கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள் பிறந்த ரபீஉல் அவ்வல் மாதம் நம்மை வந்தடைய இருக்கின்றது. அதிலும் குறிப்பாக இவ்வருடம் அம்மாதம் திங்கட்கிழமை தொடங்குவது சிறப்பினில் இன்னொரு சிறப்பாகும். ஏனெனில் திங்கட்கிழமை அண்ணல் (ஸல்) அவர்கள் இப்பூலகில் பிறந்த தினமாகும். حَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ حَدَّثَنَا مَهْدِيُّ بْنُ مَيْمُونٍ عَنْ غَيْلَانَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَعْبَدٍ الزِّمَّانِيِّ عَنْ أَبِي قَتَادَةَ الْأَنْصَارِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سُئِلَ عَنْ صَوْمِ الِاثْنَيْنِ فَقَالَ فِيهِ وُلِدْتُ وَفِيهِ أُنْزِلَ عَلَيَّ رواه مسلم இந்த சந்தர்ப்பத்தில் நன்றியுணர்வோடு நமது நாயகம் (ஸல்) அவர்களை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். மக்களை நேர்வழிப்படுத்திட அல்லாஹ்வால் அனுப்பப்பட்ட இறைத்தூதர்களில் அவர்கள் உயர்வானவர்கள் மட்டுமல்ல… எல்லா இறைத்தூதர்களைக் காட்டிலும் தமது உம்மத்திற்காக அதிகம் உழைத்தவர்களும் கூட. ஆம்! நமக்கா...